உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால், அணிகளை ஏ,பி என இரண்டு குழுக்களாக பிரித்து லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஏ குழுவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், பி குழுவில் சென்னை, ஹைதரபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பஞ்ஜாப் அணிக்காக விளையாடி வருகிறார். 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் மயங்க் அகர்வாலிடம் உள்ளது. இதற்கு முன்னர் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வந்த கே.எல் ராகுல், ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே லக்னோவிற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.