Skip to main content

பதக்க வேட்டையில் இந்தியா- மீண்டும் ஒரு தங்கம்!

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

India in the hunt for medals - a gold again!

 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்கனவே இந்தியா மூன்று பதக்கங்களைப் பெற்றிருந்த நிலையில் தற்பொழுது நான்காவது பதக்கமாக தங்க பதக்கத்தை உறுதி செய்துள்ளது இந்தியா.

 

22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டிகள் நடைபெறக்கூடிய முதல் நாளான நேற்றே இந்தியா தொடர்ச்சியாக மூன்று பதக்கங்களை உரித்தாக்கியது. ஏற்கனவே 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்க்கார் வெள்ளிப் பதக்கமும், 61 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் பிரிவில் 269 கிலோ எடையைத் தூக்கி இந்திய வீரர் குருராஜா வெண்கலப் பதக்கமும், மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் 197 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் சானு தங்கமும் வென்றுள்ளார்.

 

இந்நிலையில் பளுதூக்குதலில் 67 கிலோ எடை பிரிவில் ஜெர்மி லால்ரினுங்கா தங்கம் வென்றுள்ளார். இதனால் காமன்வெல்த் 2022 போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.