Skip to main content

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி படைத்த மோசமான வரலாறு...

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது நியூஸிலாந்து அணி.

 

india faces its first test whitewash after eight years

 

 

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா 242 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி  73.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு தனது இரண்டாது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. கடந்த எட்டு ஆண்டுகளில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆவது இதுவே முதன்முறை ஆகும்.