இந்தியா இலங்கை இடையே நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. கொழும்புவில் உள்ள பிரேம்தாசா மைதானத்தில் வைத்து இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்போடு மலிங்கா தலைமையில் இலங்கை அணி விளையாடி வருகிறது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சிகர் தவான் விஷ்வா ஃபெர்னாண்டோவின் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணி 18 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது.