சீன ஆன்லைன் வணிக நிறுவனமான அலிபாபா 1999-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் 'ஜாக் மா' வரும் 10-ஆம் தேதியுடன் தனது பதவியிலிருந்து விடைபெறப் போவதாக அறிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு அவர் வகித்துவந்த தலைமைசெயல் அதிகாரி பதவியை விட்டு விலகினார். அதன் பிறகு நிர்வாக இயக்குனராக பணியில் இருந்தார். தற்போது அந்தப் பதவியில் இருந்தும் விலகப் போவதாக அறிவித்துள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டு 'தி ஜாக் மா ஃபோண்டேஷன்' (the jack ma foundation) என்னும் சேவை அமைப்பைத் திறந்தார், இதன் முக்கிய நோக்கம் சீனாவின் கல்வி அமைப்பை மேம்படுத்துவதே என்று அப்போது தெரிவித்து இருந்தார். அலிபாபா நிறுவனத்தை தொடங்குவதற்கு முன் சீனாவில் ஆங்கில ஆசிரியராய் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பில் கேட்ஸும் இதுபோன்ற முடிவை 2000-ஆம் ஆண்டு எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜாக் மா “நான் பில் கேட்ஸிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும், என்னால் வெகுநாட்களுக்கு பணக்காரனாய் இருக்க முடியது ஆனால், பணிவிடை பெறுவதற்குள் நிச்சயம் எதாவது ஒரு நல் விஷயத்தை செய்வேன்” என்றார்.