ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய சென்னை அணி 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய மும்பை அணி 19 ஆவது ஓவரில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்ற இலக்கை எட்டியது.

இது சென்னை அணி இந்த சீசனில் மட்டும் மும்பையிடம் தோல்வியடையும் 3 ஆவது போட்டி ஆகும். மும்பை அணியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணியை கலாய்த்து நேற்று இரவு முதல் பல மீம்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை அணி வீரர் ஹர்டிக் பாண்டியா தோனி குறித்த ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எனது முன்னுதாரணம், எனது நண்பர், எனது சகோதரர், எனது ஜாம்பவான்" என குறிப்பிட்டு தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
My inspiration, my friend, my brother, my legend ❤? @msdhoni pic.twitter.com/yBu0HEiPJw
— hardik pandya (@hardikpandya7) May 8, 2019