Published on 30/09/2022 | Edited on 30/09/2022

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில், கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் 13 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6.5 கோடி ரூபாயும், அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 3.25 கோடி ரூபாயும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 12 சுற்றோடு வெளியேறும் எட்டு அணிகளுக்கு தலா 60 லட்சம் ரூபாயும், முதல் சுற்றுப் போட்டிகளில் அணிகள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 35 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 16- ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை டி20 ஓவர் போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.