Published on 01/04/2020 | Edited on 01/04/2020
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 180க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் 8,94,027 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,050 என உள்ளது. கரோனா வைரஸூக்கு எதிராக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
கரோனா வைரஸ் தொற்றின் எதிரொலி காரணமாக பெரும்பாலான சர்வதேச விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.