Skip to main content

அடுத்த இலக்கு ஒலிம்பிக் தடகளம்தான்! - உற்சாகத்தில் ஹிமாதாஸ் 

Published on 28/08/2018 | Edited on 28/08/2018

எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் தடகளப் போட்டிகள்தான் என இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாஸ் தெரிவித்துள்ளார். 
 

Hima

 

 

 

18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியாவின் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் 8 தங்கம், 16 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 45 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய வீரர்களில் 17 வயதே நிரம்பிய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாஸ் மீது அதிக கவனம் இருந்தது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற ஹிமாதாஸின் சாதனையே அதற்குக் காரணமாக இருக்கிறது. 
 

இந்நிலையில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமாதாஸ் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பக்ரைனைச் சேர்ந்த சல்வா நாசெர் 50.09 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். 50.79 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த ஹிமா தாஸ், நூலிழையில் தங்கப்பதக்கத்தைத் தவறவிட்டார். 
 

 

 

வெற்றிக்குப் பின் பேசிய ஹிமாதாஸ், “எனது செயல்திறன் என்னைத் திருப்திப் படுத்துகிறது. எனக்கு பதக்கங்களைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. என் நேரத்தை நேர்த்தியாக செலவிடுவதைப் பற்றியே எனது எண்ணங்கள் இருக்கின்றன. என்னை இன்னமும் உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மற்ற வீரர்களைப் போல எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டி மட்டுமே. நாட்டிற்காக நான் இன்னமும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்” என தெரிவித்துள்ளார்.