Skip to main content

சின்ன வயசுதான்... ஆனா செம பிளேயரு - இந்திய வீரரைப் புகழ்ந்த ஆஸி. ஜாம்பவான்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

subman gill

 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு 'ஆஷஸ்' எனப் பெயர் இருப்பதைப்போல், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர், 'பார்டர்- காவஸ்கர்' கோப்பை தொடர் எனப் பெயருள்ளது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர், இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் ஆகிய இருவரையும் கவுரவிக்கும் விதமாக, இரு அணிகளும் மோதும் தொடருக்கு, அவர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்தநிலையில், ஒரு பேட்டியில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டரிடம், முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வாலோடு யார் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவேண்டும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு, ஆலன் பார்டர், சுப்மன் கில்லை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், அவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். 

 

இதுகுறித்து அவர், "நான் கடந்த சில நாட்களாக சிட்னியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது சுப்மன் கில்லால் ஈர்க்கப்பட்டுவிட்டேன். அவரது நுட்பத்தில் எதோ ஒன்று இருக்கிறது. அவர் இளம்வீரர், அதனால் அவசரப்பட்டு சில ஷாட்களை ஆடுவார் என எனக்குத் தெரியும். ஆனால் அவர், உண்மையாகவே நல்ல வீரராகத் தெரிகிறார்" எனக் கூறியுள்ளார்