Skip to main content

சதம்.. 5,000 ரன்கள்.. மைல்கல் நாயகன் விராட் கோலி!

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
சதம்.. 5,000 ரன்கள்..  மைல்கல் நாயகன் விராட் கோலி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறார். விளையாட்டு வர்ணனையாளர்கள் அவரை ‘மைல்கல் நாயகன்’ என சொல்லுமளவுக்கு அவரது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.



அந்த வகையில், இலங்கைக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் கோலி. இதன் மூலம், தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்குமுன் பல கேப்டன் மூன்று மற்றும் நான்கு சதங்கள் அடித்திருந்தாலும், அவையனைத்தும் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் அடித்ததாகவே இருந்தன. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு அணியின் கேப்டன் தொடர்ந்து மூன்று சதங்களை விளாசியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

மேலும், இன்றைய போட்டியில் 5,000 ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இது அவரது 105-ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இன்றைய போட்டியில் 52 பந்துகளில் அரை சதம் அடித்த கோலி, 110 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சத்தீஸ்வர் புஜாரா, ‘இந்த ஸ்டிரைக் ரேட்டில் யாராலும் பேட்டிங் செய்ய முடியாது. கோலியைக் கண்டு நான் அதிசயிக்கிறேன்’ எனக்கூறியது நினைவுகூரத்தக்கது.

ஒரே ஆண்டில் 11 சர்வதேச டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி அடைகிறார். இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஒரே ஆண்டில் 12 சதங்கள் அடித்ததுதான் அதிகம்.

சார்ந்த செய்திகள்