Skip to main content

போதைப்பொருள் கடத்தல்; 9 பேர் கைது 

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
9 people arrested incident

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருவேறு இடங்களில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், 4.17 கிலோ கிராம் கொண்ட மெத்தபட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 9 பேரில் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பதும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் சென்னை ராயப்பேட்டை அருகே போதைப் பொருள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே சமயம் சென்னை சென்ட்ரல் வந்த பூரி வாராந்திர விரைவு வண்டியில் இருந்த பயணிகளிடம் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். ரயில் பயணிகளைச் சோதனை செய்த போது ஒடிசாவைச் சேர்ந்த சரோஜினி, நளினி என்ற இரு பெண்களைக் கைது செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பஞ்சுமிட்டாயை அடுத்து பானி பூரியால் புற்றுநோய்'-ரெய்டுக்கு தயாராகும் உணவு பாதுகாப்புத்துறை

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Panipuri after panchamitai' - Food security department prepares for raid


அண்மையில் பஞ்சுமிட்டாயில் இடம்பெற்றுள்ள செயற்கை நிறமி புற்றுநோயை உருவாக்கும் கூறுகளைக் கொண்டது என கண்டறியப்பட்ட நிலையில் அவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செயற்கை நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் சோதனையை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அங்குள்ள பானி பூரி கடைகளில் மசாலாவில் கலந்துள்ள கலவைகள் குறித்து கேட்டறிந்தனர். முறையான அனுமதி பெற்று பானி பூரி கடை நடத்தப்படுகிறதா? என்ற ஆய்வு செய்த அதிகாரிகள், பானிபூரி, சாட் உணவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகளில் இருந்த பானி பூரி மசாலாவின் மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஒருவேளை புற்றுநோயை உருவாக்கும் நிறமிகள், ரசாயன ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கும் பானிபூரியில் ரசாயனங்கள் சேர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

'Panipuri after panchamitai' - Food security department prepares for raid

இந்த அதிரடி ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், ''சென்னையை பொறுத்தவரை இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளோம். இன்னும் மூன்று, நான்கு நாட்களுக்குள் சென்னை முழுவதும் ஆய்வு முடித்து விடுவோம். தமிழ்நாடு முழுக்க உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு அந்த மாதிரிகளின் அடிப்படையில் கிடைக்கும் முடிவுகளை வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

Next Story

சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
chennai mtc bus no 102 incident

சென்னை பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லக்கூடிய 102 ஆம் எண் கொண்ட சென்னை மாநகர அரசு பேருந்து ஒன்று அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நடுவழியிலேயே இந்த பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் பேருந்தின் மற்ற பகுதிகளில் மளமளவென தீப்பிடித்து. இதனால் பேருந்து முழுவதும் எரிய தொடங்கியது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைந்தனர். முன்னதாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக பேருந்தை விட்டு பாதுகாப்பாக இறங்கி விட்டனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த மக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.