Skip to main content

“பீஃப் சாப்பிடுவதால் என்ன பயன்” – விளக்குகிறார் சித்த மருத்துவர் ஷர்மிகா

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

 “What is the benefit of eating beef” – explains Siddha doctor Sharmika

 

ஓம் சரவண பவ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும், எதையெல்லாம் முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பீஃப் உணவு பற்றி கேட்ட பொழுது அவர் அளித்த விளக்கத்தினை  பின்வருமாறு  காணலாம்.

 

“பீஃப் சாப்பிடுவதால் நம் உடலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படப்போவதில்லை. மாட்டை சாமியாக பார்ப்பதால் தான் கெடுதல் என்று சொல்லுகின்றனர். அதனை அளவாக எடுத்துக் கொள்ளும் போது எந்தவிதக் கெடுதலும் இல்லை. எப்போதாவது ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். பீஃப் சாப்பிடுவதால் மட்டும் ஊட்டச்சத்து குறைபாடு எதுவும் ஏற்படுவதில்லை. அதில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது.  

 

வங்காள தேசத்தில் மிகவும் பணக்காரர்களும் இருக்கிறார்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களும் இருக்கிறார்கள். இருவருக்குமான உணவாக அங்கு மாட்டுக்கறி உணவு அதிக புழக்கமாக இருக்கும். அவர்களுக்கு நார்மலாக உணவு கிடைப்பதில்லை. அதனால் தான் மாட்டுக்கறி எடுத்துக் கொள்கின்றனர். அதனால் நியூட்ரிசன் அளவு என்பது அவர்களுக்கு ஓரளவுக்கு சரி செய்யப்படுகிறது. ஆனால், ஆட்டுக்கறியை முதன்மையாகவும் அதிகமாகவும் மாட்டுக்கறியை இரண்டாம் பட்சமாக குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.  

 

மாட்டுக்கறி சாப்பிட்டால் மாடு மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஏனெனில், அதில் எனர்ஜி அதிகம். மாட்டை  சாமியாக பார்ப்பதால் தான் அதனை உண்ணக் கூடாது என்கிறார்கள். வெளிநாடுகளில் அப்படி பார்ப்பதில்லை. அங்கெல்லாம் அதிகம் மாட்டுக்கறியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.” இவ்வாறு தெரிவித்தார்.