சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்தும் அதை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்தும் ஹோமியோபதி டாக்டர் தீபா விளக்குகிறார்
20 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. இதில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. கல்யாணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு, இதனால் மாதவிடாய் காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படும். சிலருக்கு நீண்ட காலம் மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும். இதுபோன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
சில பெண்களுக்கு முகத்தில் மீசை வளரும், குரலில் மாற்றம் ஏற்படும், உடல் எடை விரைவாக அதிகரிக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பெரும்பாலும் குழந்தை இருக்காது. அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஹோமியோபதி மருத்துவ முறையில் தீர்வு இருக்கிறது. மற்ற மருத்துவ முறைகளில் தீர்வு இல்லாத விஷயங்களுக்குக் கூட ஹோமியோபதி மூலம் நம்மால் தீர்வு காண முடியும். சரியான மருத்துவரிடம் நீங்கள் செல்லும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை அவர் வழங்குவார்.
இந்த பிரச்சனைக்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. நம்முடைய உடலில் அதிகமான அளவில் இன்சுலின் சுரக்கும்போது பெண்ணுக்கு ஆணின் ஹார்மோனும், ஆணுக்கு பெண்ணின் ஹார்மோனும் அதிகம் சுரக்கும். இதனால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படும். நம்முடைய வாழ்க்கை முறை, மன அழுத்தம், உணவு முறை ஆகிய அனைத்துமே இதற்கு காரணமாக அமைகிறது. நாம் தற்போது உட்கொள்ளும் உணவு முறை சரியானது அல்ல.
ஆரோக்கியமான உணவு, நிம்மதியான வாழ்க்கை ஆகியவை மிகவும் முக்கியம். இனிப்பான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் எடையை நிச்சயம் குறைக்க வேண்டும். பொதுவான வீட்டு வேலைகளை செய்வதன் மூலமாகவே உடல் எடையை நம்மால் பெருமளவு குறைக்க முடியும். நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து விதமான சத்துக்களும் உடலுக்குத் தேவை. எதையும் அளவுக்கு மீறி நாம் உண்ணக்கூடாது. காய்கறிகளும் பழங்களும் தான் நம்முடைய உடலைக் காப்பாற்றும் உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ற காய்கறிகள் மற்றும் பழங்களை நாம் உண்ண வேண்டும். கீரைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.