Skip to main content

பீரியட்ஸ் வரலன்னு மகிழ்ச்சியா இருக்காதீங்க... அது பெரிய சிக்கலாகும் - ஹோமியோபதி டாக்டர் ஆர்த்தி விளக்கம்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Dr Arthi | Causes of Irregular Periods | 

 

மாதவிடாய் கோளாறு குறித்தும் அதைச் சரி செய்வதற்குப் பின்பற்ற வேண்டிய ஹோமியோபதி மருத்துவக் குறிப்புகள் குறித்தும் டாக்டர் ஆர்த்தி விளக்குகிறார்.

 

மாதவிடாய் கோளாறு என்பது இன்று பெரும்பாலான பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில் இருக்கிறது. நம்முடைய உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இது ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மாற்றம், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, ரத்தக் கசிவு, கர்ப்பப்பை கட்டி என்ற பல்வேறு வகைகளில் இந்த கோளாறுகள் ஏற்படுகின்றன. ஹோமியோபதியில் இதற்கான சரியான தீர்வு இருக்கிறது. இதில் முழுமையாக இந்த நோயை குணப்படுத்த முடியும்.

 

முதலில் பிரச்சனை என்ன என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம். அதன் பிறகு அவர்களுக்கான சிகிச்சையை முடிவு செய்வோம். இந்தப் பிரச்சனையின்போது முகப்பரு ஏற்படுதல், முகத்தில் அதிகமான முடி வளர்தல், முடி உதிர்தல், உடல் எடை குறைதல் மற்றும் அதிகரித்தல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு சரியான முறையில் மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த நோயை நிச்சயம் குணப்படுத்த முடியும்.

 

ஹோமியோபதியில் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை நாங்கள் கொடுப்போம். நீர்க்கட்டிகள் ஏற்படும்போது ஹோமியோபதி சிகிச்சை மூலம் அந்தக் கட்டிகளை முழுமையாக நீக்குவோம். அலோபதியில் அவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். சிலருக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகளால் கேன்சர் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஒரு வருடத்திற்கு மாதவிடாயில் மாற்றங்கள் இருக்கும். அதன் பிறகும் அவை தொடர்ந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

 

இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. துரித உணவுகளை அதிக அளவில் நாம் உண்ணும்போது அவை நம்முடைய உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெண் குழந்தைகள் விரைவில் வயதுக்கு வருவது இப்போது அதிகம் நடக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் நிறைய கெமிக்கல்கள் இருக்கின்றன. அவை நம்முடைய ஹார்மோன்களை பாதிக்கின்றன. பிராய்லர் சிக்கனும் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது. இவை அனைத்துமே விரைவில் வயதுக்கு வருவதற்கான காரணங்களாக அமைகின்றன.

 

நிறைய பழங்கள், நட்ஸ் ஆகிவற்றை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு நாம் வேலை கொடுக்க வேண்டும். தியானம் மேற்கொள்ள வேண்டும். சில மணி நேரங்களாவது நமக்குப் பிடித்த விஷயங்களை நாம் செய்ய வேண்டும். இதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். பாதாம், முந்திரி போன்றவற்றை குறைந்த அளவில் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.