கிராம்பில் உடலுக்கு தேவையான பலவித நன்மைகள் கொட்டி கிடக்கின்றது. பல்வலியை போக்குவதற்கு கிராம்பை விட சிறந்த வலி நிவாரணி வேறு எதுவுமில்லை. வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவி புரிவதற்கும், உடலின் சூட்டை கட்டுக்குள் வைத்திருக்கவும் கிராம்பு அதிகம் பயன்படுகின்றது. ரத்த ஓட்டத்தை முறைப்படுத்த கிராம்பை விட நல்ல மருத்துவ பொருள் வேறு எதுவுமில்லை என்பதே உண்மை. கிராம்பை எண்ணெயில் வறுத்து பொடி செய்து தேனில் குழைந்து சாப்பிட்டால் வாந்தி கட்டுக்குள் வரும். தொண்டை கரகரப்பை சரிசெய்ய கிராம்பு உதவிகரமாக இருக்கும்.
நான்கு கிராம்பை தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் காலரா போன்ற கொடிய நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். தேன் மற்றும் வெள்ளை பூண்டுடன் கிராம்பை கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்சனை சரி ஆகும். உடலில் ஏற்படும் ஜீரணக் கோளாறுகளை குறைப்பதில் கிராம்பிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. கிராம்பை பசும்பாலில் அரைத்து தலையில் கட்டினால் எப்படிபட்ட தலைவலியும் பறந்துவிடும். தசை பிடிப்புள்ள இடங்களில் கிராம்பு எண்ணெய் தடவி வர தசை பிடிப்பு சரியாகும். கண் இமைகளில் ஏற்படும் அழற்சியை போக்க கிராம்பு பயன்படுகின்றது.