உலகில் மனித இனம் வாழ்வதற்கு தற்கால சூழ்நிலைகள் கடும் சவாலாக இருந்து வருகின்றது. எண்ணற்ற நோய் கிருமிகள் தினமும் புதிதாக தோன்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த வகையில் சார்ஸ் வைரஸில் ஆரம்பித்து இன்று கொரோனா வைரஸ் வரை ஆபத்துக்களின் பட்டியல் நீள்கிறது. ஆனால் நாட்டுமருத்துவத்தில் அனைத்து கிருமிகளுக்கு மருத்துவம் இருப்பதாக ஆதிகாலம் முதல் நம்பப்பட்டு வருகிறது. ஆங்கில மருத்துவம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு நாட்டு மருத்துவத்தை பெருபாலானவர்கள் கைவிட்டுவிட்டனர். அந்த வகையில் பல்வேறு நேய்களை தீர்க்கும் நாட்டு மருத்துவ மருந்துகளை நாம் மறந்தே போய் உள்ளோம். அந்த வகையில் பல்வேறு உடல் கோளாறுகளை நீக்கும் கண்டங்கத்தரியின் நற்பலன்களை நாம் இங்கு காண்போம்.
சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கண்டங்கத்தரியை தொடர்ந்து ஏழு நாள் உணவில் சேர்ந்து சாப்பிட்டுவர சளித்தொல்லை நீங்கும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லைகளும் இதன் மூலம் குறைக்கலாம். வியர்வை நாற்றம் மற்றும் கீல்வாதம் நோய்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். கண்டங்கத்தரியின் பழத்தை நெருப்பில் போட்டு அதில் வரும் புகையை ஆவி பிடித்தால் பல்லில் ஏற்படும் பாதிப்புக்கள் முற்றிலுமாக குறையும். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு கண்டங்கத்தரியின் உதவி இன்றியமையாத ஒன்றாகும். ஆடாதோட வேருடன் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் நீரை பருகினால் ஆஸ்துமா பிரச்சனை உடனடியாக குறையும். கண்டங்கத்தரியின் பூவை தொடர்ந்து உண்டு வர கண்ணில் உள்ள பிரச்சனை மற்றும் பார்வை குறைபாடு ஆகியவற்றை முற்றிலுமாக குறையும்.