இன்றைய பஞ்சாங்கம்
02-07-2023, ஆனி 17, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 08.22 வரை பின்பு பௌர்ணமி. கேட்டை நட்சத்திரம் பகல் 01.18 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 01.18 வரை பின்பு அமிர்தயோகம். பௌர்ணமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிபலன் - 02.07.2023
மேஷம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பகல் 01.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
ரிஷபம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 01.18 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் என்றாலும் பேச்சில் கவனமாக இருந்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
கன்னி
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த உபாதைகள் நீங்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகள் வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
தனுசு
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
மகரம்
இன்று வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். வெளி பயணங்களால் அலைச்சலும், பண விரயங்களும் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கும்பம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நெருங்கியவர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.