





Published on 17/03/2022 | Edited on 17/03/2022
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு வெள்ளி ரிஷப வாகன பெருவிழா நடந்தது. 10ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 11ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 12ம் தேதி வெள்ளி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 13ம் தேதி சவுடல் விமானமும், 14ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலாவும் நடந்தது. இதை தொடர்ந்து இன்று 17ஆம் தேதி 63 நாயன்மார்களின் ஊர்வலம் நடைபெற்றது.