Published on 21/11/2018 | Edited on 21/11/2018

சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்துவதை கேரள அரசு நிறுத்திக்கொள்ள வேண்டுமென பாஜக இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், இங்கிருந்து செல்லக்கூடிய பக்தர்கள், சபரிமலைக்கு வெளியில் இருக்கக்கூடிய பக்தர்கள், கேரள மாநில பக்தர்களாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு பக்தர்களாக இருந்தாலும் சரி, எந்த மாநில பக்தர்களாக இருந்தாலும் சரி, இந்தியாவில் எந்த பகுதியில் எந்த மனிதனாக இருந்தாலும் சபரிமலைக்குச் செல்கிற பக்தர்கள் யாரையும் தவறாக நடத்தாமல் இருப்பது சரியான ஒன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அவ்வாறு நடந்திருப்பது மனவேதனையை தரக் கூடியதாக அமைந்திருக்கிறது என்று கூறினார்.