Skip to main content

ஏமனில் கைது செய்யப்பட்ட ஒசா^மா... சவுதி கூட்டுப்படை பரபரப்பு அறிக்கை...

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

ஏமன் நாட்டு அரசுக்கு பல ஆண்டுகளாக கடும் சவாலாக இருப்பது அந்நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் அமைப்பு. அந்நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் அமைப்பால் அந்நாட்டு அரசு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

 

yeman is leader arrested by saudi army

 

 

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் சவுதி அரசுகள் ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் அமைப்பை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுக்கு உதவிகள் செய்து வருகின்றன. அதன் ஒரு நிலையாக ஐஎஸ் இயக்கத்தின் ஏமன் தலைவர் அபு ஒசாமா சவுதி கூட்டுப் படைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை பற்றி சவுதி கூட்டுப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏமனின் ஐஎஸ் தலைவர் அபு ஒசாமா, ஏமன் அரசு மற்றும் சவுதிப் படைகளால் கடந்த ஜூன் மாதம் 3 ஆம்  கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சில ஐஎஸ் உறுப்பினர்களும் அவருடன் கைது செய்யப்பட்டனர்” என தெரிவித்துள்ளது.

மேலும் அவர் எந்த இடத்தில், எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்து அவர்கள் தகவல் வெளியிடவில்லை. ஒசாமாவின் இந்த கைது ஏமன் நாட்டில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐ.எஸ் அமைப்பிற்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்