உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55,86,715 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,47,852 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 23,65,467 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 17,06,226 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 3,53,427, ஸ்பெயினில் 2,82,480, பிரிட்டனில் 2,61,184, பிரேசிலில் 3,76,669, இத்தாலியில் 2,30,158, பிரான்சில் 1,82,942, ஜெர்மனியில் 1,80,789, துருக்கியில் 1,57,814, ஈரானில் 1,37,724, சீனாவில் 82,992 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,805 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 3,633, ஸ்பெயினில் 26,837, பிரிட்டனில் 36,914, பிரேசிலில் 23,522, இத்தாலியில் 32,887, பிரான்சில் 28,432, ஜெர்மனியில் 8,428, துருக்கியில் 4,369, ஈரானில் 7,451, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.