Published on 04/04/2020 | Edited on 04/04/2020
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
![world wide coronavirus 11 lakhs above](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qfx7HBSiRiiZBRUmSrukWesOtJW7DFC4et7YGNOCQuI/1585979437/sites/default/files/inline-images/corona123.jpg)
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,17,860 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 59,203 பேர் இறந்த நிலையில், 2,28,990 பேர் குணமடைந்துள்ளனர்.