Published on 15/11/2018 | Edited on 15/11/2018

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புகழேந்தி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் புகழேந்தியின் கோரிக்கையை தனி நீதிபதி நிராகரித்தார். சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார் என்பது குறித்து பதிலளிக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மற்றும் மகள் தீபா ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட், போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அதை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் புகழேந்தி மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.