Published on 08/09/2020 | Edited on 08/09/2020
கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் உலகின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவ்வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியும் பெரும்பாலும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் வைரஸ் தொற்று குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், இந்தக் கரோனா தொற்று இறுதியான பெருந்தொற்று என்று நம்மால் சொல்லமுடியாது. இது கற்றுத்தந்த பாடம், இது வாழ்வின் ஒரு பகுதி என்பதை உணர்த்திவிட்டது. அடுத்த வைரஸ் தொற்று ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கு நாம் இதைவிட சிறப்பான நிலையில் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.