Skip to main content

"வாக்கு எண்ணிக்கையில் மோசடி" -எண்ணிக்கைக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப்...

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

We'll be going to the US Supreme Court says trump

 

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்காக உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், "அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளது. இது அமெரிக்க பொதுமக்கள் மீதான மோசடி. அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். அனைத்து வாக்குகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். என்னைப் பொறுத்தவரை நான் வெற்றி பெற்றுவிட்டேன். ஜோ பிடெனால் என்னை வீழ்த்த முடியாது. எதிர்பார்க்காத பல்வேறு இடங்களையும் கைப்பற்றியுள்ளோம். பல்வேறு இடங்களில் முன்னிலை வகிக்கிறோம். இப்போது நம் குறிக்கோள் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதாகும்" எனத் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், நீதிமன்றம் செல்வதாக கூறிய ட்ரம்ப்பின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்