வாட்ஸ் அப்பில் தவறுதலாக செய்திகள் அனுப்பிவிட்டீர்களா? - இனி கவலை வேண்டாம்!
கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மாதாந்திர பயன்பாட்டாளர்களைக் கொண்ட குறுஞ்செய்திக்கான செயலி வாட்ஸ் அப். இது தனிப்பட்ட மற்றும் நிறுவனங்கள் சார்ந்த உபயோகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒருமுறை அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை மீண்டும் மாற்றமுடியாத நிலைதான் தற்போதுவரை நீடித்துவருகிறது. அது தவறுதலாக அனுப்பப்பட்டிருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. இப்படி தவறுதலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை மாற்றுவதற்கான வேலைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கூடியவிரைவில் அந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ‘அன்செண்ட்’ என்ற சேவையின் மூலமாக தவறுதலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கிஃப் வகை தகவல்களை, அவை அனுப்பப்பட்ட ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக மாற்றிக்கொள்ளலாம். ஒரு செய்தி அனுப்பப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பின் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. இந்த சேவை இறுதிகட்டத்தை அடைந்திருந்தாலும், வாட்ஸ் அப் தரப்பில் மேம்பாட்டுப் பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கூடியவிரைவில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரலாம்.
- ச.ப.மதிவாணன்