வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. தற்போது வங்கதேசத்தில் வன்முறைகள் குறைந்திருந்தாலும், அநேக இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் நவம்பர் 18 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.