1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வங்கதேசத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் தற்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. அந்த காலகட்டத்தில் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி பிரசாரத்துக்காக டாக்காவில் இருந்து பாப்னா மாவட்டத்துக்கு ரயிலில் சென்றார்.
அவர் சென்ற ரயில் பாப்னா ரயில் நிலையத்தை அடைந்ததும், ஆளும்கட்சியினர் அவர் வந்த ரயில் பெட்டியை தாக்கினர். இதில் மிக மோசமாக தாக்கப்பட்ட ஷேக் ஹசீனா அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 52 பேரில் 47 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான 9 பேருக்கு மரண தண்டனையும், 25 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.