Published on 15/12/2020 | Edited on 15/12/2020

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்தது தேர்வாளர்கள் குழு. 50 மாகாண தேர்வாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ஜோ பைடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 306, ட்ரம்ப் 232 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து ஜனவரி 20- ஆம் தேதி அமெரிக்காவின் 46- வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கிறார். அதேபோல் அமெரிக்கத் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்.