அமெரிக்க மாநிலம் புயலால் அழியப்போகிறதா?
50 லட்சம் பேர் வெளியேற்றம்
மக்கள் வெளியேறியதால் வெறிச்சோடி இருக்கும் பகுதிகள்
அமெரிக்காவின் கடலோர மாநிலமான புளோரிடாவை ஞாயிற்றுக்கிழமை இர்மா என்ற பயங்கரமான புயல் தாக்கப் போகிறது. இதையடுத்து கடலோரப் பகுதியில் உள்ள 56 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
கரீபியன் தீவுகள் ஏற்கனவே இந்த புயலால் நாசமாகிவிட்டன. புளோரிடா மாநிலம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உடனடியாக மதிப்பிட முடியவில்லை. ஆனால், அமெரிக்காவை பேரழிவுக்கு ஆளாக்கப்போகிறது என்பது தெரிகிறது.
எனவேதான் மக்களை வெளியேறும்படி உத்தரவிடுகிறோம். உத்தரவை மதிக்காதவர்கள் அரசாங்கத்தின் மீட்பு உதவியை எதிர்பார்க்க முடியாது என்பதையும் சொல்லியிருக்கிறோம்.
அமெரிக்காவை இதுவரை இப்படி ஒரு புயல் அச்சுறுத்தியதில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த புயல் சேதங்களை சமாளி்க்க தேவையான நிதியை ஒதுக்கி அதிபர் ட்ரம்ப் சட்டம் இயற்றியுள்ளார்.