உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரஸில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைனும் அதற்கு சம்மதித்தது. இதனால் இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வந்து உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய திருப்பமாக போரில் பங்கேற்க உக்ரைனில் உள்ள சிறைக்கைதிகளுக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பினால் சிறையில் உள்ள ராணுவ அனுபவமிக்க கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போரில் பங்கேற்க விரும்பும் பொதுமக்களுக்கு ஆயுதம் வழங்கப்படும் என ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.