Skip to main content

'ஊழியர்களுக்கு தனி... ஓட்டுநர்களுக்கு தனி' மன்னிப்பு கேட்ட உபேர் நிறுவனம்!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

உபேர் நிறுவனத்தின் தலைமை அமெரிக்க அலுவலகத்தில் ஊழியர்களுக்கு ஒரு தனி கழிப்பறையும் அங்கு பணிபுரியும் டிரைவர்களுக்கு ஒரு தனி கழிப்பறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் வாகன ஓட்டுனர். இதனை புகைப்படம் எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆண்கள், பெண்கள் என்று தான் தனித்தனியாக கழிப்பறை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சமூகத்தில் இரண்டு வகுப்புகளாக ஊழியர்களை பிரித்து தனித்தனி கழிவறையை அமைக்கப்பட்டிருப்பது நியாயமா? என அந்தப் பெண் வாகன ஓட்டுநர் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

f



பொதுமக்கள் மட்டுமின்றி அமெரிக்க எம்பி ஒருவரும் உபேர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உபேர் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. இந்த நடைமுறையை தங்களது தங்கள் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது என்றும் இந்த நடைமுறை உடனடியாக மாற்றப்படும் என்றும் இது தங்கள் கவனத்திற்கு மீறிய செயலாக நடந்து விட்டதாகவும் உபேர் நிறுவனம் பதிலளித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்