Skip to main content

“திருடும் நபர்களுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கும் தக்க பதிலடி காத்திருக்கிறது” கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. சமீபத்தில் இந்தியா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்திய ரூபாயிலும், பண்டமாற்று முறையிலும் வாங்குவதற்கு இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது அதன்படியே இந்தியா அந்த நாட்டினடிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கிவருகிறது. தற்போது அதனை தொடர்ந்து வெனிசாலவும் இந்தியாவுடன் இந்திய ரூபாயைகொண்டு கச்சா எண்ணெய் வாங்குவதற்கு முடிவுக்கு வந்துள்ளது. 

 

 

vv

 

இதற்காக வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் மதிப்பிலேயே கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

 

அதேசமயம் வெனிசுலாவில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும் அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. மேலும் பிரதமர் நிகோலஸ் மதுரோ மீது கடும் விமர்சனங்களும் ஏழுந்துவருகிறது. இந்நிலையில் வெனிசுலா மீது கடந்த மாதம் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்த நேரத்தில்தான் வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்தியா தரப்பில் கடந்த சில தினங்களுக்குமுன் இந்திய ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவந்தது. தற்போது இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை இடும் வகையில் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “வெனிசுலாவின் வளங்களை கொள்ளைடித்துக் கொண்டிருக்கும் மதுரோவை ஆதரிக்கும் நாடுகளையும், நிறுவனங்களையும் மன்னிக்க முடியாது. வெனிசுலா மக்களை பாதுகாப்பதே எங்கள் முக்கிய பணி. இதற்கு துணை நிற்கும் நாடுகளுடன் இணைந்து செயலாற்றுவோம்.

 

வெனிசுலாவின் கச்சா எண்ணெயை எடுத்து விற்பனை செய்ய மதுரோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறு அவர் விற்பனை செய்தால் அது திருட்டு செயலே. திருடுபவர்களுக்கு சரியான தண்டனை பெற்று தருவோம். திருடும் நபர்களுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கும் தக்க பதிலடி காத்திருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்