Published on 22/07/2020 | Edited on 22/07/2020
அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அலாஸ்காவைத் தாக்கியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யு.எஸ்.ஜி.எஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு 11:12 (PST) மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அலாஸ்காவின் பெர்ரிவில்லுக்கு தென்கிழக்கில் 60 மைல் தூரத்திலும், ஆறு மைல் ஆழத்திலும் இதன் மையம் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தெற்கு அலாஸ்கா, அலாஸ்கா தீபகற்பம் மற்றும் அலுடியன் தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.