Published on 05/12/2018 | Edited on 05/12/2018

7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பசிபிக் பகுதியில் உள்ள நியூ கலிடோனியா தீவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அரசின் கீழ் உள்ள இந்த தீவில் கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனையடுத்து 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.