Skip to main content

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய கொள்கையை ஏற்க முடியாது: பாகிஸ்தான்

Published on 26/08/2017 | Edited on 26/08/2017
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய கொள்கையை ஏற்க முடியாது: பாகிஸ்தான்

தெற்காசியாவுக்கான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய கொள்கையை ஏற்க முடியாது என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார். அதில், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை வளர்க்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட வேண்டாம் என குறிப்பிட்டிருந்த டிரம்ப், தீவிரவாதம் குறித்த இரட்டை நிலைப்பாட்டை பாகிஸ்தான் கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கை குறித்து விவாதிப்பதற்காக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்ப்பதாக கூறும் அமெரிக்காவின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு, தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் துணை போகாது எனவும் உறுதியளிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்