Published on 05/10/2020 | Edited on 05/10/2020
கரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரெம்டெசிவர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பாதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ட்ரம்பின் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம் என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. ஆனால் அந்நாட்டு பத்திரிகைகளில் இந்த செய்தி முக்கிய இடத்தை பெற்றுள்ளன.