60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலையை இந்தியாவிடமே திருப்பி அளித்தது லண்டன்.
1961ஆம் ஆண்டு நாளாந்தாவில் உள்ள அருங்காட்சியத்திலிருந்து 12ஆம் நூற்றண்டைச் சேர்ந்த வெங்கல புத்தர் சிலை காணாமல் போனது. கடந்த மார்ச் மாதம் லண்டனில் நடந்த வர்த்தக கண்காட்சியில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட புத்தர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து லண்டன் காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டு, அந்த சிலையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் இறுதியில் உரிமையாளர் மீது எந்த தவறும் இல்லை என்றும், அவர் மீண்டும் இந்தியாவிற்கே சிலையை ஒப்படைக்க ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலை லண்டனில் உள்ள இந்திய துதரங்கத்தில் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்ட்டது. மீட்கப்பட்ட புத்தர் சிலை விரைவில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.