வெர்ஜினியாவில் இயங்கிவரும் உணவு விடுதி ஒன்றிற்கு சென்ற டிரம்பின் செய்திதொடர்பாளர் விடுதி உரிமையாளரால் வெளியேற்றப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

அமேரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபர்வர்களின் குழந்தைகளை பிரித்துவைக்கும் டிரம்பின் செயல்பாடு உலக எதிர்ப்புகளை சந்தித்தது. ஆனால் சொந்த நாட்டிலேயே இந்த நடவடிக்கையின் மீதான எதிர்ப்புகள் குவிய தொடங்கிவிட்டன.
டிரம்பின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் அமெரிக்கா வெர்ஜினியா பகுதியிலுள்ள தி ரெட் ஹென் என்ற உணவு விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விடுதியின் உரிமையாளர் நீங்கள் டிரம்ப் ஆதரவாளர் மற்றும் அவரிடம் பணியாற்றுபவர் என்பதால் உங்களை விடுதியிலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

மேலும் குழந்தைகளை பிரித்து வைக்கும் கொள்கை மக்களுக்கு அன்றாடம் உணவளிக்கும் எங்களை போன்றவர்களுக்கு டிரம்பின் இந்த இரக்கமற்ற கொள்கை எதிரானது மனித தன்மையற்றது மேலும் நீங்கள் டிரம்ப் எடுத்த பெற்றோர் குழந்தைகளை பிரித்துவைக்கும் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளீர் எனவே கண்டிப்பாக வெளியேற வேண்டும் எனக்கூறி வெளியேற்றினார்.

இதைப்பற்றி சாரா தனது ட்விட்டர் பக்கத்தில் என்னக்கு பிடிக்காதவர்கள் சொல்வதை கூட மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். அதனால் அந்த விடுதியை விட்டு வெளியேறினேன் என குறிப்பிட்டிருந்தார். இந்த துணிச்சலான செயலால் அந்த விடுதிக்கு பாராட்டும் எதிர்ப்பு குவிந்து வருகின்றன.