Published on 22/09/2022 | Edited on 22/09/2022
ஆஸ்திரேலியாவில் மேத்வாரி துறைமுகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கி கிடக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. டாஸ்மேனியா தீவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் திடீரென்று திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் பலவை உயிருடனும், பல திமிங்கலங்கள் இறந்தும் காணப்பட்டன.
இதனை அறிந்த உயிரியல் தன்னார்வலர்கள் திமிங்கலங்களை மீண்டும் நடுக்கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படையுடன் சேர்ந்து போர்வையால் மூடி தொடர்ந்து திமிங்கலங்களை உயிருடன் வைத்திருக்கவும், கடல்களில் விடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே இதேபோல் 2020 ஆம் ஆண்டு இதே கடற்கரையில் இதைவிட அதிகமாக 500க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தகுந்தது.