தமிழீழ விடுதலை புலிகள் இயக்க போராளிகள் மற்றும் தமிழ் ஆண்களை, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று ஜெனிவாவில் வெளியான அறிக்கையொன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்ததாக இலங்கை அரசாங்கத்தால் சொல்லப்படும் 2009 ஆண்டில் இருந்து தற்போதுவரை தடுப்புக்காவலில் வைத்து ஆண்களுக்கு பாலியல் சித்தரவதை செய்கின்றனர் என்று அந்த அறிக்கையில் சொல்லப்படுகிறது. இந்த அறிக்கை மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.
”மௌனம் கலைந்தது”- இலங்கை போரில் தப்பித்து வந்த ஆண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுகின்றனர் என்ற தலைப்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன் பல்கலைக்கழனத்தின் கலாநிதி ஹெலீன் டூகே தயாரித்துள்ளார். இந்த பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 121 ஆண்களின் குமுறலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.