Skip to main content

சிறிசேனா உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை....

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

 

இலங்கையில் நாடாளுமன்றம் வருகின்ற 14ஆம் தேதி கூடும் என்று அறிவித்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நவம்19ஆம் துவங்கி நவம் 26 வரை மனுத்தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி இலங்கை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகளான, யு.என்.பி., தமிழ் தேசிய கூட்டணி, ஜே.வி.பி., எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 10 கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கின் மீது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்; பதவி விலகிய ராஜபக்சே

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

 

ran

 

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து கடந்த அக்டோபர் 26ம் தேதி சிறிசேனா  நீக்கினார். அதற்கு பதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.ஆனால் 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு 95 எம்.பிக்கள் மட்டுமே ஆதரவாக இருந்ததால் அவர் மீது ரணில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற முடியவில்லை. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால், தேர்தல் நடத்தவும், ராஜபக்சே பிரதமராக செயல்படவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நேற்று அதிபர் சிறிசேன வெளியிட்ட குறிப்பில் ரணிலை தவிர வேறு ஒருவரைத்தான் பிரதமராக தேர்ந்தெடுப்பேன் என கூறியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சே இன்று தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் கொடுத்துள்ளார். 

 

 

Next Story

ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து செயல்படமுடியாது- மைத்திரிபால சிறிசேனா

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
sirisena


இலங்கையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவியை பறித்து அந்த இடத்தில் மஹிந்த ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து பல்வேறு அரசியல் குழபத்தில் சிக்கித் தவிக்கிறது இலங்கை. 
 

இந்நிலையில் சர்வதேச ஊடக நிறுவனங்களின் சந்திப்பில் இலங்கை அதிபர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமர் பதவியில் அமர்த்தப்படுபவர் அதிபருடன் இணைந்து செயல்படக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து செயற்பட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேறு ஒருவரை அழைத்துவர முடியும்” என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
 

மேலும்,  பாரிய ஊழல் மோசடியில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு தொடர்புள்ளது. அது குறித்து ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிறிசேனா தெரிவித்துள்ளார்.