இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் இலங்கையில் உள்ள பெண்கள் அனைத்து வகையான பர்க்காக்கள் அணிய தடை விதித்தார். மேலும் அவர் கூறுகையில் இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் குறி வைத்து தீவிரவாதிகள் வைத்த வெடிக்குண்டுகள் வெடித்தது. சில இடங்களில் தீவிரவாதிகள் தங்கள் உடலில் நிரப்பி இருந்த வெடிக்குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே இலங்கையில் ஒவ்வொரு நாளும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வருவதாகவும் , சோதனையின் போது மனித வெடிக்குண்டுகள் வெடிப்பது அதிகரித்து வருவதாக அதிபர் தெரிவித்தார். இந்த தீவிரவாத தாக்குதலை பெண்களின் பங்கும் அதிகமாக இருப்பதால் , பெண்கள் பர்க்காக்கள் அணிய தடை என்று அதிபர் விளக்கமளித்துள்ளார். அதே போல் இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றத்தில் பெற்றார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. மேலும் இலங்கை ராணுவத்தினர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே இலங்கை முழுவதும் தீவிர சோதனையில் ராணுவ வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உளவுத்துறை மூலம் அவ்வப்போது இலங்கை அரசுக்கு தீவிரவாதிகள் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மற்றும் "நேஷ்னல் தவ்ஹித் ஜமாத்" உள்ளிட்ட தீவிரவாத அமைப்புக்கு இலங்கையில் தடை விதித்தார்.
பி.சந்தோஷ். சேலம் .