அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் பனிபொழிவு காணப்படுகின்றது. இதன் காரணமாக சாலையில் வாகன விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. அங்குள்ள அருவிகள், ஆறுகள் அனைத்தும் உறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று எதிர்பாராத விதமாக தடம் புரண்டு ஆற்றில் விழுந்தது.
இந்நிலையில், வெர்ஜினியா மாகாணத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் அன்று கடுமையான பனிமூட்டம் நிலவி வந்துள்ளது. வாகனங்களில் செல்வோருக்கு முன்னால் செல்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு இந்த பனிமூட்டம் இருந்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.