Skip to main content

பிரதமர் பதவியில் ஜப்பான பிரதமர் சாதனை!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

ஜப்பான் நாட்டின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை ஷின்சோ அபே பெற்றுள்ளார். ஷின்சோ அபே இன்று ஜப்பான் பிரதமராகத் தனது 2,887வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதன் மூலம் டரோ கட்சுராவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். டரோ 1901 முதல் 1913 வரை ஜப்பான் பிரதமராக இருந்தவர். 65 வயதான அபே உலகில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஏழு நாடுகளில் அதிகமான காலம் ஆட்சி செய்த தலைவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறார். 2005 முதல் பதவியில் இருக்கும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மட்டுமே இவரைவிட அதிக நாட்கள் பதவியில் இருப்பவர்.



தற்போது வரை அபேயின் செல்வாக்கு குறையவில்லை. இவருடைய பதவிக்காலம் குறைந்தபட்சம் 2021 வரை நீட்டிக்க உள்ளது. இவருக்குப் பின் அந்நாட்டை ஆட்சி செய்யப்போகிறவர் என்ற நிலையில் யாரும் உருவாகவும் இல்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அபேயின் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 36.8 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளது தெரிந்துள்ளது. இது எதிர்க்கட்சியான அரசியல் சாசன ஜனநாயகக் கட்சிக்கு உள்ள ஆதரவைக் காட்டிலும் 6.3 சதவீதம் கூடுதலாகும்.

 

சார்ந்த செய்திகள்