Published on 01/01/2019 | Edited on 01/01/2019

வங்கதேசத்தில் மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 288 தொகுதிகளில் ஹேக் ஹசினாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் வெறும் 6 இடங்களையே கைப்பற்றின. இதில் வாக்குப்பதிவு நடந்தபோது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியாகினர். இந்த நிலையில் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் மீண்டும் முறையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதுகுறித்து ஷேக் ஹசீனா பேசும்போது, “ இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்ததுள்ளது. என்னுடைய கட்சி அனைவருக்காகவும் உழைத்தது. எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு அவர்களே காரணம். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சரியாக ஈடுபடவில்லை” என கூறியுள்ளார்.