
பல நாட்களாக இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையேயான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் மக்களுக்கு ராணுவம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
டெல் அவிவ், ஸ்டீரொட், அஸ்-ஹலான் உள்ளிட்ட நகரங்களில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி காசா பகுதியிலிருந்து வடக்கில் 80 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு முக்கியமான நகரம் தான் இந்த டெல் அவிவ். இது இஸ்ரேலின் மிகப்பெரிய இரண்டாவது நகரமாகும். இந்த நகரத்திலிருந்து இருந்து தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் இருக்கிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் எச்சரிக்கை அலாரம் எழுப்பப்பட்டுள்ளது. ஹமாஸ் படையினர் டெல்அவிவின் மீது ராக்கெட்களை ஏவ வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதன் அடிப்படையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.