சவுதி அரேபியாவின் ஜெட்டாக் விமான நிலையத்தில் பெண் ஒருவர் விமான நிலையத்தில் தனது குழந்தையை மறந்து விட்டுவிட்டு விமானத்தில் ஏறி, விமானம் பயணிக்கத் தொடங்கியபின் குழந்தை நினைவுக்குவந்து ‘என்னுடைய குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டேன்’ என அழுதுள்ளார். அதன் பின் விமானம் திரும்பி விமான நிலையத்திற்கே வந்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டாக்கில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சவுதி அரேபியா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தையைவிட்ட அந்த பெண் அழுததும், உடனடியாக விமானி, விமானத்தை விமான நிலையத்திற்கு திருப்ப கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதியை கோரியுள்ளார்.
அனுமதி அளிக்கப்பட்டு, அந்த விமானம் திரும்பி ஜெட்டாக் விமான நிலையத்திற்கே வந்துள்ளது. இதுதொடர்பாக விமானி பேசும் 'கிளிப்' சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது விமானம் வானில் பறக்க தொடங்கி விட்டதா? அல்லது ரன்வேயில் சென்றுகொண்டிருந்ததா? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.