
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,29,659 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,74,981 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 76,91,451 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 65,452 பேருக்குக் கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 34,79,447 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 7,33,699, ஸ்பெயினில் 3,03,033, பெருவில் 3,30,123, சிலியில் 3,17,657, பிரிட்டனில் 2,90,133, சீனாவில் 83,602, ஈரானில் 2,59,652, மெக்ஸிகோ 2,99,750, தென் ஆப்பிரிக்காவில் 2,87,796 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலில் ஒரே நாளில் 21,783 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 18,87,959 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 770 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 72,921 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 465 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,38,247 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 11,439, பெருவில் 12,054, ஸ்பெயினில் 28,406, தென் ஆப்பிரிக்கா 4,172, பிரிட்டனில் 44,830, சிலியில் 7,024, மெக்ஸிகோவில் 35,006, ஈரானில் 13,052, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.